காலில் விழுந்து கெஞ்சும் வரை காஸ் மற்றும் பால் மாவினை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
விலைவாசி பல மடங்கு அதிகரித்து மக்கள் பல்வேறுபட்ட துயரங்களையும் பசி பட்டினிகளையும் சந்தித்து வரும் வேளையில் பால் மா மற்றும் சமையல் எரிவாயு வர்த்தகத்தில் செயற்கை தட்டுப்பாடுகளையும் பதுக்கல்களையும் மேற்கொண்டு மனச்சாட்சியற்ற வகையில் வர்த்தகர்கள் பலமடங்கு விலைகளை அதிகரித்து இலாபம் பெற முனைவது வெட்கப்படவேண்டியதொரு செயற்பாடாகும்.
பால்மா வர்த்தகத்தில் அங்கர் பால் மா ஒன்று 520 ரூபா விற்கப்படும் அதே வேளை அதை வாங்க வேண்டும் எனின் 04 கோக்கட் 200 ரூபா கொடுத்து வாங்க வேண்டும். அதே போல ரத்தி பால் மாவினைப் பொறுத்தவரை 400 கிராம் பால்மாவினைப் பதுக்கி விட்டு 200 கிராம் 340 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. 04 யோக்கட் வாங்கும் போது அங்கர் பால் மா சந்தையில் உள்ளது எனின் ஏன் யோக்கட் வாங்காத போது சந்தையில் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பது கேள்விக்கும் கேலிக்கும் உரியதாகும்.
சமையல் எரிவாயுவினைப் பொறுத்தவரை தட்டுப்பாடு எனக் கூறும் வர்த்தகர்கள் ஆனால் இந்த தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டால் 4500 இற்கு பெற முடியும் எனக் கூறப்படுகின்றது 2700 இற்கு இல்லாத சமையல் எரி வாயு எப்படி 4500 இற்கு கிடைக்கின்றது. இந்த பதுக்கல் வர்த்தகத்தில் பாதிக்கப்படுவது ஏழை மக்களே. வசதி வாய்த்தவர்கள் தமது செல்வாக்கில் 2700 இற்கு சமையல் எரிவாயுவினைக் கொள்வனவு செய்ய ஏழை மக்கள் 4500 இற்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதுவே சீமெந்து போன்ற பல்வேறு பொருட்களுக்கும் வவுனியாவில் கொள்ளை வர்த்தக்கம் இடம்பெறுகின்றது. இதனை உயர் அரச அதிகாரிகளோ அல்லது நுகர்வோர் அதிகார சபையினரோ கண்டு கொள்வதில்லை.
அப்படியென்றால் இதற்கு தீர்வு தான் என்ன? மக்கள் எரிவாயுவினை விடுத்து மாற்று வழிகளுக்கு மாறவேண்டும். அதற்கான செலவு குறைந்த விரைவுச் சமையலுக்கு பல்வேறுபட்ட சிக்கன முறைகள் யூ டியுப்பில் அறிந்து கொள்ளலாம். அதேபோல பால் மாவிற்குப் பதில் பசும்பாலுக்கு மாற வேண்டும். அல்லது ஒரு குடும்பத்தில் ஒரு நாட்டு மாடாவது வளருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் சமையல் எரிவாயு மற்றும் பால் மாவிற்கு மாற்று வழிகளை கையாள்வதன் மூலம் இவற்றினை முற்றாக தவிருங்கள். இவ்வாறு செய்வதே இவ்வாறான உற்பத்தியாளர்களுக்கு செருப்படி. அதன் பின்னர் அவர்கள் உங்கள் வாசல் வந்து இவற்றை உபயோகிக்குமாறும் விலை குறைப்பதாகவும் கெஞ்சும் நிலை ஏற்படும். செருப்பால் அடித்து அனுப்புங்கள். ஏழை மக்களின் வலி என்னவென்று அப்போதாவது புரியட்டும்.
No comments