இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு முன்னெடுப்புகள்



2021 ஜூலை 13ஆந் திகதி அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையேயான உறவை பல துறைகளில் பலப்படுத்துவதிலான பலன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட கழிவுகளை சுத்திகரிப்பதற்காக, கடலோரத் தூய்மையாக்கல் முயற்சிகளுக்கு உதவும் முகமாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆதரவுகளை வழங்கியமைக்காக அமைச்சர் குணவர்தன இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார். அதில் கலந்துரையாடப்பட்ட ஏனைய விடயங்கள் பின்வருமாறு: 

  • எதிர்கால கடல் அனர்த்தங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்காக இலங்கையின் கடல் பாதுகாப்பு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள்
  • கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான பொது சுகாதாரத் துறையின் திறனை மேம்படுத்துவதற்கான அவுஸ்ரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவுகளினை பெற்றுக்கொள்ளல். 
  • இலங்கையில் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் கல்வித் தகுதிகளைப் பெறக்கூடிய கல்வி மையமாக இலங்கையை கூட்டாக ஊக்குவித்தல்.


No comments

Powered by Blogger.