பட்டதாரிப் பயிலுநர்கள் அவர்களது பயிற்சிக் காலத்தில் பெறக்கூடிய லீவுகள் தொடர்பான அரச சுற்றுநிருபம்
பட்டதாரி பயிலுநர்களுக்கு லீவு வழங்குதல்
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுநர் பயிற்சி வழங்குதல் - 2020 திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பயிலுநர்களின் லீவு தொடர்பாக பின்வருமாறு நடவடிக்கை எடுப்பதற்கு 2021.05.03 ஆந் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பட்டதாரி பயிலுநர்களுக்கும் பயிற்சிக் காலத்தினுள் ஒரு மாதத்திற்கு சம்பளத்துடன் இரண்டு (02) நாள் லீவுகளை வழங்குவதற்கும், அவ்விருநாட்களுக்கு மேலதிகமாக மாதத்தினுள் பெறப்படும் லீவு சம்பளமற்ற லீவாகவும் கருதி ஒரு மாதக் கொடுப்பனவில் 1/30 இற்குச் சமனான தொகை வீதம் குறைத்தல்.
ஒரு வருட பயிற்சி காலப் பகுதிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள பெண் பட்டதாரி பயிலுநர்களுக்கு பிள்ளை பிறந்ததிலிருந்து சனி, ஞாயிறு மற்றும் அரசாங்க விடுமுறை நாட்கள் தவிர்ந்த என்பத்து நான்கு (84) நாட்களுக்கு முழுச் சம்பளத்துடன் பிரசவ லீவை வழங்குதல்.
III. பட்டதாரி பயிலுநர் நியமனம் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் பிரசவம் நிகழ்ந்து என்பத்து நான்கு (84) நாட்களை விஞ்சாத சகல பெண் பட்டதாரி பயிலுநர்களும் இவ்வேற்பாடுகளை ஏற்புடையதாக்கிக் கொண்டு இத்திகதிக்கு முன்னர் சம்பளமற்ற லீவினைப் பெற்றிருப்பின் அச்சம்பளமற்ற லீவினை முழுச் சம்பத்துடன் லீவாகக் கருதப்படும்.
No comments