அரச உத்தியோகத்தர்களுக்கான வட்டி குறைந்த ஆதனக்கடன் தொடர்பான விபரங்கள்


அரச உத்தியோகத்தர் ஒருவர் கடனின்றி எவ்வித சொத்துக்களையும் கொள்வனவு செய்வது என்பது தற்போதைய காலத்தில் சாத்தியமற்றது. வங்கிகளில் பல்வேறு கடன்களை பெறக்கூடிய வசதிகள் உள்ளபோதும் வட்டிகுறைந்த கடனாக ஆதனக்கடன் எனும் சொத்துக்கடன் காணப்படுகின்றது. சொத்துக்கடனை பெற்றுக் கொள்வதற்கு 05 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்து இருப்பதுடன் பதவியில் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் அவசியமானது.

ஏன் இந்த ஆதனக்கடனுக்கு மாத்திரம் வட்டிவீதம் குறைவாக உள்ளது?

ஏனெனில் இக்கடனினை நீங்கள் வங்கியில் இருந்து பெறும்போது குறித்தகடனுக்கான வட்டியின் ஒரு பகுதியினை  உங்கள் சார்பில் செலுத்தும் (குறித்த சுற்றுநிருபத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்). உங்கள் சார்பில் அரசாங்கம் செலுத்தும் வட்டிவீதமானது நீங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்ப மாறுபடும். அது தொடர்பான விபரம் பின்வருமாறு:

கடன்தொகை (ரூபா)

அலுவலகரினால் செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதம் (%)

அரசினால் செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதம் (%)

மொத்த செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதம்  (%)

500,000.00 வரை

3.0%

5.5%

8.5%

500,001.00 தொடக்கம் 1,000,000.00 வரை

6.0%

2.5%

8.5%

1,000,001.00 தொடக்கம் 3,000,000.00 வரை

7.0%

2.0%

9.0%


தாபனக்கோவையில் எங்கு இக் கடன் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது?

அரச தாபனக் கோவை என்பது அரச அலுவலகமொன்றில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் ஒழுக்கம் போன்ற விடயங்களுக்கான ஒரு வழிகாட்டி என கூறலாம். அந்த வகையில் அரச அலுவலகர் ஒருவர் ஆதனக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் தாபன விதிக் கோவையின் XXIV ஆம் அத்தியாயத்தின் 11 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மாற்றங்களை பொது நிர்வாக அமைச்சு காலத்திற்கு காலம் பொருத்தமான வகைகளில் மாற்றம் செய்து வெளியிடும்.

சொத்துக்கடன் பெறுவதற்கான தகமைகள் மற்றும் ஏனைய விரிவான விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள பின்வரும் சுற்றுநிருபங்களை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்:

No comments

Powered by Blogger.