அஷானி சவிந்த ரணதுங்க யுனஸ்கோவின் வளர்முக நாடுகளில் விஞ்ஞானத்தில் பெண்கள் - 2022 விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 


காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் நடவடிக்கை எனும் கருப்பொருளில் வளர்முக நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட திறமைமிக்க 06 பெண்களில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 34 வயதுடடைய அஷானி சவிந்த ரணதுங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார். இதற்கான விருது வழங்கும் விழா இஸ்தான்புல்லில் எதிர்வரும் 24.03.2022 அன்று நடைபெறவுள்ளது. 

இவ்விருதினை யுனஸ்கோவின் வளர்முக நாடுகளில் விஞ்ஞானத்தில் பெண்கள் (Organization for Women in Science for the Developing World - OWSD) மற்றும் எல்சேவியர் அறக்கட்டளை (Elsevier Foundation) ஆகியன இணைந்து வழங்குகின்றன. 

No comments

Powered by Blogger.