நாளை சர்வதேச வானொலி நாள் - 13.02.2022

 


13.02.2022 அன்று சர்வதேச வானொலி நாள் உலகெங்கும் கொண்டாடப்படவுள்ளது.

வானொலி தொடர்பான நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றில் நம்பிக்கையும் பரந்தளவிலானதொரு பயன்பாட்டையும் கொண்ட ஊடகமாக வானொலி காணப்படுகின்றது.


தற்போதைய நாட்களில் வானொலியானது உடனுக்குடன் தகவல்களை வழங்குவது மட்டுமன்றி பொதுமக்களின் விருப்பங்களை அறிந்து அது தொடர்பான வானொலி நிகழ்ச்சிகளை வழங்குவதோடு மட்டுமல்லாது துறை நிபுணர்களை அழைத்து மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் வழங்குகின்றது. அது மட்டுமல்லாது கொவிட் பரவல் காரணமாக மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது தொலைதூரக் கல்வியினை வழங்குவதிலும் பெரும்பங்காற்றியது எனலாம். 

இவ் ஆண்டின் பிரதான கருப்பொருளாக வானொலி மற்றும் நம்பிக்கை என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இம்முறை சர்வதேச வானொலி நாளானது 03 உபகருப்பொருட்களை இலக்காக கொண்டுள்ளது
  1. வானொலி ஊடகத்தில் நம்பிக்கை: சுயாதீனமான மற்றும் உயர்தர நிகழ்ச்சிகளை வடிவமைத்தல்
  2. நம்பிக்கை மற்றும் அணுகல்: உங்கள் நேயர்களை கவனித்துக் கொள்ளுங்கள்
  3. வானொலி நிலையங்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை: போட்டித்தன்மையை உறுதி செய்தல்.
இவ் சர்வதேச நாளினை ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனம் ஒழுங்கமைக்கின்றது.

No comments

Powered by Blogger.