அம்மா ஏன் உயிரிலும் மேலானவர்? உலகளாவிய ரீதியில் 02 நிமிடத்திற்கு தாய் ஒருவர் இறக்கின்றார்.


கடந்த மே 03 ஆம் திகதி சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகளின் தவலின் அடிப்படையில் தாய்மை அடைதல் மற்றும் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் பெண்களில் ஒருவர் உலகளாவிய ரீதியில் 02 நிமிடத்திற்கு ஒருவர் இறக்கின்றார். ஆனாலும் இவ் இறப்புக்கள் தடுக்கக்கூடிய காரணங்களான இரத்தப்போக்கு மற்றும் கிருமித் தொற்றுக்களால் ஏற்படுவது மிக வருத்தத்திற்குரிய விடயம் ஆகும்.

இவ் இறப்புக்களின் மூன்றில் இரண்டினை விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் தடுக்க முடியும். உலகளாவிய ரீதியில் கடந்த 2021 இல் குழந்தை பெற்றுக் கொண்டவர்களில் 05 இலட்சம் பெண்கள் 10 - 14 வயதிற்குட்பட்டவர்கள் என ஐக்கிய நாடுகள் தெரிவிக்கின்றது. 


No comments

Powered by Blogger.