அரச நிறுவனங்களின் பணிகள் நாளை வழமைபோன்று இடம்பெறும்
நாளை திங்கட்கிழமை அரச விடுமுறை தினம் அல்ல என பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக அரச நிறுவனங்களின் பணிகள் நாளை வழமைபோன்று இடம்பெறும். இருப்பினும் வங்கிகளுக்கு நாளைமேலதிக விடுமுறை தினமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பாடசாலைகள் வழமை போன்று நாளைஇடம்பெறும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
No comments