வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி



வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அதற்கான வசதிகளை செய்து கொடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், கொவிட் மற்றும் டெங்கு பரிசோதனைக்கு மேலதிகமாக மலேரியா பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் வலியுறுத்திளாரர்.



No comments

Powered by Blogger.